பிரதான வீதியில் மண்சரிவு – மக்கள் பயணிப்பதில் அசௌகரியம்

மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பிரதான வீதி மோகினி எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுக்காரணமாக இந்த பாதை முழுமையாக மண்ணால் நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் இந்த மண்மேட்டின் ஊடாக நடந்து பயணிப்பதும் மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது. இதனால் இந்த பகுதியில் வாழும் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15000ற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்தும் இந்த பகுதிகளில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles