தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக முகநூலில் கருத்து வெளியிட்ட இளைஞர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெஸ்போர்ட் தோட்டத்தில் உள்ள நல்லையா என்பவர், தனது முகநூல் ஊடக தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக தோட்ட அதிகாரிகளால், நேற்று தோட்ட அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை என்ற போர்வையில் அவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். இதனையடுத்து அவர் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை கண்டித்தும், நீதி கோரியும் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.