‘அனைத்து நாடாளுமன்ற குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு வேண்டும்’

” சர்வக்கட்சி கூட்டு வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மீண்டும் அறிவித்தார்.

” சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறுவதற்கு தயாரில்லை என்றுதான் அறிவித்துள்ளோம். எனினும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு சர்வக்கட்சி வேலைத்திட்டம் ஊடாக ஒத்துழைப்பு வழங்கப்படும்.

கோப், கோபா மற்றும் அரச கணக்கு குழு ஆகியவற்றின் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இது சிறந்த முடிவு. மேற்படி குழுக்களின் தலைமைப்பதவி மட்டும் அல்ல, நாடாளுமன்றத்தில் உள்ள துறைசார் மேற்பார்வை குழுக்களின் தலைமைப்பதவியும் எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும்.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles