பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி இரா.ரமேஷ் ஆகியோர் இணைந்து எழுதிய இலங்கை மலையகத் தமிழர்கள் – நூல் விபரப் பட்டியல்- என்ற நூலின் அறிமுக விழா எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நூல் அறிமுக விழாவின் வரவேற்புரையை கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் எம். அகிலனும், தலைமையுரையை கல்வி அமைச்சின் பெருந்தோட்ட கல்விப் பிரிவு பணிப்பாளர் சு. முரளிதரனும் நிகழ்த்தவுள்ளனர்.
நூலின் அறிமுக உரையை கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் ஜெ. சற்குருநாதனும், வாழ்த்துரையைப் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பீ.ஶ்ரீதரனும், நூல் மதிப்பீட்டுரையை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலனும் நிகழ்த்தவுள்ளனர்.
மலையக சமூகத்தில் ஆய்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் சிறப்புரையை பேராசிரியர் தை. தனராஜும், சமகால மலையகத்தின் ஆய்வு முயற்சிகள் என்ற தலைப்பிலான சிறப்புரையை பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் உம் நிகழ்த்தவுள்ளனர். ஏற்புரைகளை பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி இரா.ரமேஷ் ஆகியோரும் நன்றியுரையை ஏ.சி.ஆர். ஜோனும் நிகழ்த்தவுள்ளனர்.










