எட்டியாந்தோட்டை எக்கிளாஸ் மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இவ்வாலயத்தின் கர்மாரம்பம் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானதுடன், நேற்று புதன்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த ஆலயமானது 1957ஆம் ஆண்டு ஊர் மக்களால் ஒரு மடாலயமாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபட்டுக் கொண்டிருந்தது. இவ்வாலயத்தின் வெறும் பூசை வழிபாடுகள் மட்டுமில்லாமல் அறநெறி பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் என்பவற்றுடன் கல்விப் பணியையும் ஒருங்கே கொண்டு இயங்கிய ஆலயமாகும்.

மடாலயமாக திகழ்ந்த இவ்வாலயமானது 2000ம்  ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஆகம விதிக்கும் முறையாக கடந்த 20 வருடங்களாக கட்டுமான வேலைகள் நடைபெற்று ஊர் மக்கள், இளைஞர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மிகவும் அழகுடன் காட்சியளிக்கின்றது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று, எதிர்வரும் 21 ஆம் திகதி சங்காபிஷேகத்துடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் நிறைவுபெறும்.

Related Articles

Latest Articles