” அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.”
இவ்வாறு மேலவை இலங்கை கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நேற்று தெரிவித்தார்.
” மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் விசேட ஊடக சந்திப்பின் ஊடாக எமது திட்டங்கள் தெளிவுபடுத்தப்படும்.
அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய வகையிலேயே கூட்டணி உதயமாகியுள்ளது.” – எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
