சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பு நடத்த தற்போது அரசு சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை அண்ணாத்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது. அதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் போன்றோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ஐதராபாத்திலேயே மீண்டும் படப்பிடிப்பைத் தொடர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத்தில் ஏற்கனவே போடப்பட்ட அரங்குகள் இப்போது என்ன சூழலில் உள்ளன என்பதைப் பார்த்துச் சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒட்டுமொத்தக் குழுவினரிடமும் திகதிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது