தேசிய சரணாலயம் ஒன்றில் உள்ள சுவர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7ஆம் நூற்றாண்டின் 44 தங்க நாணயங்களை இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
170 கிராம் எடை கொண்ட இந்த நாணயங்கள் ஹேர்மன் நீரோடைப் பகுதியில் இருக்கும் மறைவிடம் ஒன்றில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி 635இல் முஸ்லிம் படையெடுப்பின்போது ஒரு மறைவுத் தளமாக பயன்படுத்தப்பட்ட இடம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நாணயங்கள் பிராந்தியத்தில் பைசாந்திய ஆட்சியின் முடிவுக் காலத்தைச் சேர்ந்தது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “போர் அச்சுறுத்தலில் ஒருநாள் மீட்டுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் தனது செல்வத்தை உரிமையாளர் மறைத்து வைத்திருக்கக் கூடும் என்று எமக்குத் தோன்றுகிறது” என்று இந்த அகழ்வாராய்ச்சியின் பணிப்பாளர் யோவ் லெரோர் குறிப்பிட்டார்.