பிறந்த குழந்தைகள் கொலை: தாதி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்

பிரிட்டனில் தனது பராமரிப்பின் கீழ் இருந்த 7 பிறந்த குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாதியின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் 32 வயது லூசி லெட்பி மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகளை லெட்பி மறுத்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016ஆம் ஆண்டு ஜூன் வரை அவர் 5 ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளையும் கொன்றதாக நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் அவர் வேலைசெய்துவந்த மருத்துவமனையில் லெட்பி அந்தக் கொலைகளைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் அந்த மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த மரணங்கள் லெட்பியின் பணி நேரத்தின்போது மட்டுமே நேர்ந்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இரு குழந்தைகளுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாகவும் அது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில குழந்தைகளுக்கு அதிகப்படியான பால் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles