‘தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தினால் சிறை’

இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் தீபாவளி காலத்தில் அங்கு பட்டாசு கொளுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.

பட்டாசு கொளுத்தி அகப்பட்டால் 200 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

தீவிரமான சூழல் மாசை கட்டுப்படுத்துவதற்கு கடந்த செப்டெம்பரில் அறிவிக்கப்பட்ட பட்டாசு கொளுத்துவதற்கான தடையை விரிவுபடுத்துவதாகவே தற்போதைய அறிவிப்பு உள்ளது. டெல்லி உலகின் மோசமான சூழல் மாசு கொண்ட நகராக உள்ளது.

Related Articles

Latest Articles