மஸ்கெலியா, சாமிமலை – கிலனுஜி மற்றும் டீசைட் தோட்ட பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குறித்த பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் திடீரென காணாமல் போவதாகவும் சில வளர்ப்பு நாய்களின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் இரவு நேரங்களில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள சில தேயிலை மலைகள் துப்புறவு செய்யப்படாமல் காடாகி வருகின்றபபடியால் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாமிமலை நிருபர் ஞானராஜ்