பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்த 21 வயது இளைஞரை உல்லந்துபிட்டிய பிரதேசத்தில் சுமார் 400 போதை வில்லைகளுடன் கடந்த 25 ஆம் திகதி கைது செய்ததாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 7 போதை வில்லைகள் அடங்கிய கார்ட் ஒன்றை சந்தேக நபர் 1, 800 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதிக வலி நிவாரணியான இந்த வில்லைகளை வைத்தியர்களின் பரிந்துரையின்றி, பார்மஸிகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபருக்கு இந்த வில்லைகள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்தும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர்.
