சன நெரிசலில் சிக்குண்டு தென் கொரியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவாச கோளாறு ஏற்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles