மொட்டு கட்சியினரை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு மைத்திரி தாக்குதல்!

” வீதியில் திரியும் யாசகர்களுக்கும் மேடையேற முடியும். எனவே, எந்த மேடையில் ஏறினாலும் மொட்டு கட்சியால் மீண்டெழ முடியாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே, அது விடயத்தில் எவ்வாறானதொரு முடிவை எடுக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வரலாம். எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதியின் பயணத்தை மொட்டு கட்சி தடுக்கவே முற்படும்.

‘மீண்டெழுவோம், மீண்டெழுவோம் என மொட்டு கட்சியினர் சூளுரைக்கின்றனர். அவர்கள் எப்படி மீண்டெழுவார்கள் என தெரியவில்லை. அது நடக்கபோவதும் இல்லை.

ஏனெனில் வீதியில் திரியும் யாசகர்களுக்குகூட மேடை ஏறமுடியும். எனவே, யார் வேண்டுமானாலும் கூட்டங்களை நடத்தலாம். ஆனால் மீண்டெழ முடியாது.” – எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles