சுவிட்சர்லாந்தின் ஒரு ரயில் நிறுவனம் உலகின் ஆக நீளமான பயணிகள் ரயிலை இயக்கிச் சாதனை படைத்துள்ளது.
1.9 கிலோமீற்றர் நீளமான இந்த ரயிலில் 100 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஆல்ப்ஸ் மலை ஊடான தனது 25 கிலோமீற்றர் பயணத்தை பூர்த்தி செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175ஆம் ஆண்டு நிறைவையொட்டி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக ரயிலில் 25 பெட்டிகள் இருக்கும். சாதனை முயற்சிக்காக நான்கு ரயில்கள் இணைக்கப்பட்டன. அவற்றை மொத்தமாக இணைத்து ஒரே நேரத்தில் முறையாக இயக்கப்பட்டது.