” தொழிற்சங்க வெற்றியை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்’ – சபையில் ஜீவன் உருக்கம்

இறம்பொடை, புளுபீல்ட் தோட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிபெற்றுள்ளது. குறித்த தோட்ட நிர்வாகமானது , தொழிலாளர்களுக்குரிய EPF, ETF கொடுப்பனவுகளை வழங்கியுள்ளன – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

” இறம்பொடை, புளுபீல்ட் தோட்ட நிர்வாகமானது, தொழிலாளர்களுக்கான EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்தவில்லை. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு மே மாதம் இ.தொ.கா. தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது.

தற்போது EPF, ETF செலுத்தப்பட்டுள்ளன. நிவாரண கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. காணியும் பகிரப்படுகின்றது. எனவே, இன்றுடன் போராட்டம் நிறைவுக்கு வருகின்றது. இந்த வெற்றியை போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சமர்ப்பிக்கின்றேன்.” – எனவும் ஜீவன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles