பசறையில் முருகன் ஆலயத்தில் கொள்ளை!

பசறை, கோணகலை மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளியிருக்கும் முருகன் சிலைக்கு சூட்டப்பட்டிருந்த தங்க நகைகள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.

ஆலய பூசகரின் மகன் நேற்று (08) மாலை பூசை ஏற்பாடு செய்வதற்காக ஆலயத்திற்கு சென்றவேளையில் ஆலய கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக ஆலய பூசகரான தந்தைக்கு அறிவித்துள்ளதாகவும் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் குறித்த தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles