ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர, கறுவாத்தோட்ட பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினமும் அவர் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
