நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயின் வழியிலேயே நடிப்பில் இறங்கிவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் குஞ்சன் சக்சேனா என்கிற படம் வெளியானது. அவர நடிப்புக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில் தமிழில் கடந்த 2018இல் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை இந்தியில் அறிமுக இயக்குனரான சித்தார்த் சென் குப்தா என்பவர் இயக்க உள்ளார்.
பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்திக்கு ஏற்றமாதிரி இந்த படத்தின் கதையில் மாற்றம் செய்யும் வேலை கதாசிரியர் பங்கஜ் மேத்தா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.