பெண்ணை கொன்று நரமாமிசம் சாப்பிட்டவர் மரணம்

நெதர்லாந்து மாணவி ஒருவரை கொன்று அவரது மாமிசத்தை சாப்பிட்ட நிலையில் சிறை அனுபவிக்காது தப்பிய ஜப்பான் கொலையாளி இசை சகாவா தனது 73ஆவது வயதில் காலமானார்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சகாவா கடந்த நவம்பர் 24 ஆம் திகதி மரணித்த நிலையில் அவரது இறுதிக் கிரியையில் உறவினர் மாத்திரம் பங்கேற்றனர் என்று அவரது இளைய சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

1981இல் பாரிசில் கல்வி கற்ற சகாவா நெதர்லாந்து மாணவி ஒருவரை தனது வீட்டுக் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர் அந்த மாணவியின் கழுத்தில் சூடு நடத்தி, அவரை கற்பழித்து கொன்றதோடு, மூன்று நாட்கள் அவரது உடலை வைத்து சாப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டபோதும் வழக்கு விசாரணைக்கு தகுதியற்றவர் என்று மனநல நிபுணர்கள் சான்றளித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸில் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் ஜப்பானுக்கு நாடுகடத்தப்பட்டார்.

Related Articles

Latest Articles