நடிகை தமன்னா கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
பாகுபலி மூலம் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர் தற்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.