மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனிவேல் என்பவர் இன்று மதியம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
