எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விதத்திலும் சவால் கிடையாது – என்று ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சஜித் பிரேமதாச என்பவர் சவாலை எதிர்கொள்ள முடியாத தலைவர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டபோது, கருஜயசூரியமீது சுமையை திணித்துவிட்டு நழுவினர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போதும், டலஸ் அழகப்பெருமவை நிறுத்திவிட்டு, ஒதுங்கியவர். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் சஜித் போட்டியிடமாட்டார். அவர் எமக்கு சவால் கிடையாது.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.
