16,692,398 பேர் வாக்களிக்க தகுதி!!

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின்  அடிப்படையில் ஒரு கோடியே 66 லட்சத்து 92 ஆயிரத்து 398 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விரைவில் (2023 மார்ச் 20 இற்கு முன்னர்) உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தேர்தலுக்கு மேற்படி வாக்காளர் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 17 லட்சத்து 43 ஆயிரத்து 542 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 18 லட்சத்து 24 ஆயிரத்து 742 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 273 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 11 லட்சத்து 59 ஆயிரத்து 147 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 929 பேரும்,  நுவரெலியா மாவட்டத்தில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 850 பேரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

  • காலி – 884,028
    மாத்தறை – 672,218
    அம்பாந்தோட்டை – 506,368
    யாழ்ப்பாணம் – 577,718
    வன்னி – 298,015
    மட்டக்களப்பு – 433,346
    அம்பாறை – 534,145
    திருகோணமலை – 301,908
    குருணாகலை – 1,385,703
    புத்தளம் – 643,279
    அநுராதபுரம் – 717,482
    பொலன்னறுவை – 342,031
    பதுளை – 684,521
    மொனறாகலை – 384,888
    இரத்தினபுரி – 902,996
    கேகாலை – 696,269

2020 பொதுத்தேர்தலுக்கு 2019 வாக்காளர் பட்டியலே பயன்படுத்தப்பட்டது. இதன்போது ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். எனினும், ஒரு கோடியே 23 லட்சத்து 43 ஆயிரத்து 302 பேர் மாத்திரமே வாக்குரிமையைப் பயன்படுத்தினர். ( 75.89)

2022 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 66 லட்சத்து 92 ஆயிரத்து 398 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அந்தவகையில் 2019 பட்டியலுடன் ஒப்பிடுகையில் 428,513 புதிய வாக்காளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளதா என்பதை இந்த https://eservices.elections.gov.lk/pages/myVoterRegistration.aspx தளத்துக்கு சென்று பார்க்க முடியும். தேசிய அடையாள அட்டை இலக்கமும், மாவட்டமும் தெரிந்தால் போதும்.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles