அமரர் மகேஷ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல், யாழ். வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வானது பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமானது. அதனையடுத்து அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் விஜிமருதன், மதகுருமார், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles