தமிழ் மொழியைக் கற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

அரச மொழிகள் திணைக்களத்தின்  வழிகாட்டலின் கீழ் தமிழ் மொழியைக் கற்று நிறைவு செய்த கேகாலை மாவட்டத்தின்  தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலக அலுவலகங்களில் கடமையாற்றும் 132 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த தமிழ்மொழி கற்கை நெறி, 150 மணித்தியாலங்கள்  நடத்தப்பட்டதுடன்,அதன் இறுதி நிகழ்வு தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் சந்தன அனுருத்த தலைமையில் ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலாளர்களின் பங்களிப்புடன் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது பயிற்சி நெறியை நி​றைவு செய்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தமிழ் மொழியைப் பிரதிபலிக்கக் கூடிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Related Articles

Latest Articles