சூடு பிடிக்கிறது மலையக அரசியல் களம் – திகா அணியிலிருந்து வெளியேறினார் காளிதாஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்திலிருந்து விலகுவதாக, சங்கத்தின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் காளிதாஸ் அறிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச சபையின் உறுப்பினராக – கடந்த பத்து ஆண்டுகளாக இரண்டு தடவைகள் தொழிலாளர் தேசிய சங்கத்தினை காளிஸதாஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தனது இந்த முடிவு குறித்து கட்சி உயர் பீடத்துக்கு அறிவித்துள்ளதாகவும், இனிவரும் காலப்பகுதியில் சுயாதீனமா இயங்கவுள்ளதாகவும் காளிதாஸ் அறிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளியான காளிதாஸ் தோட்டக் கமிட்டி தலைவர், மாவட்டத்தலைவர் முதலான பதவிகளை தொழிலாளர் தேசிய சங்கத்தில் வகித்ததுடன் நாவலப்பிட்டி காரியாலயத்தில் இணைப்பாளராகவும் தொழிலாளர் தேசிய முன்னணி குயின்ஸ்பெரி பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டு வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles