தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க ஜனாதிபதி முடிவு!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் தான் ஈடுபடபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் கொழும்பில் நேற்று நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இரு வருடங்களுக்குள் மீட்பதே தனது பிரதான இலக்கு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரம் ஏற்க தயார் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 40 வீதமான புதுமுக வேட்பாளர்களை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட யோசனையையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles