11 மாத குழந்தை துஷ்பிரயோகம் – பாதக செயலில் ஈடுபட்ட தாய்மாமா கைது!

பிறந்து பதினொரு மாதங்களேயான  பச்சிளங்குழந்தையினை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய  குழந்தையின் தாய் மாமன் இன்று காலை கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

கோப்பாய் இருபாலை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண கல்வியங்காடு பகுதியை  சேர்ந்த 11 மாதங்களான குழந்தை ஒன்றினை குறித்த குழந்தையின் தாயின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்

குறித்த குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு அடையாளங்கள் காணப்பட்டன.

இதனையடுத்த குறித்த குழந்தையின் தாயாரால் குழந்தை வைத்தியரிடம் அழைத்தது செல்லப்பட்டபோது வைத்தியர்களால் உரிய பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது குறித்த குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குழந்தையின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குறித்த வீட்டிற்கு  குழந்தையின் தாயின் சகோதரன் வந்து சென்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர்  யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார்  வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவி வண்டியின் சாரதியாக கடமையாற்றி வருவதாகவும் அவர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பட்ட நபர் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிசாரை உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் சந்திர நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related Articles

Latest Articles