பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு

உள்ளூராட்சி தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை இன்று (15) காலை 8.30 உடன் நிறைவடைந்தது.

அரசியல் கட்சிகள் அந்தந்த கட்சிகளின் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான அதிகாரி தொடர்பான விபரங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.

இதனிடையே இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles