உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி

இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் கை சின்னத்துடன் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (16) அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு கை அடையாளத்தின் கீழ் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், தாம் இன்று( 16) கூடிய கட்சியின் அரசியல் குழுக்களில் கை அடையாளத்துடன் போட்டியிட தீர்மானித்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மாகாணசபைத் தேர்தலில் சில மாவட்டங்களில் கை சின்னங்களுடனும், சில மாவட்டங்கள் கூட்டணியிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன்போது ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No description available.

Related Articles

Latest Articles