அரசியலமைப்புப் பேரவை நாளைய தினம் (25) கூடவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதான எதிர்க்கட்சி அல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில், நாளைய தினம் கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.