எதிர்காலத்தில் பெரிய நில அதிர்வுகளை இலங்கை சந்திக்க நேரும்

இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில அதிர்வுகளை இலங்கை எதிர்பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் நேற்று பதிவான 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மலையக குருவியின்  நிருபர்களது  கூற்றுப்படி, சில கிராமங்களில் குறைந்தது மூன்று நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ,வெடிச்சத்தம் போன்ற சத்தம் கேட்டதாக கிராமவாசிகள் சிலர் கூறியுள்ளனர்.

Related Articles

Latest Articles