பிரபாகரன் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது,  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான பேட்டிகள் தொடர்பாக உரிய தகவல் கிடைத்த பிறகு பதில் தரப்படும் என, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும் பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது என்றும், இதனை பிரபாகரனின் அனுமதியுடன் வெளிப்படுத்துகிறேன். இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் இந்த தகவலை கூறுகிறேன் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

Related Articles

Latest Articles