இத்தாலியின் தெற்கு கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கியதில் 12 சிறார்கள் உட்பட 60 பேர் பலியாகியுள்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றால் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துவருகின்றனர்.
சட்டவிரோதமாக – கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறார்கள் உட்பட 100 இற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த மரப் படகு ஒன்று , ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. இதில் 12 சிறார்கள் உட்பட 60 பேர்வரை நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். ஏனையோர் காணாமல்போயுள்ளனர்.
