அரச குடும்பத்தை கேலி செய்வது போன்ற நையாண்டி கருத்துகள் மற்றும் இறப்பர் வாத்துகளைக் கொண்ட நாட்காட்டிகளை விற்றதற்காக தாய்லாந்தில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னரை அவமதித்ததாகக் குற்றங்காணப்பட்டிருக்கும் 26 வயதான நரதோர்ன் சொட்மன்கொங்சின் என்ற இளைஞரே தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
மன்னரை அவமதிப்பதற்கு எதிரான சட்டத்தின் கீழ் கடந்த 2020 தொடக்கம் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதில் இறப்பர் வாத்துகள் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் குறியீடாக உள்ளது.










