36,000 மெட்ரிக் டன் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரம் அடங்கிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வர உள்ளது.
இந்த கப்பல் மார்ச் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை சென்றடைய உள்ளது.
எதிர்வரும் காலங்களில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிரிபிள் சுப்பர் பாஸ்பேட் (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.