கண்டி 5 மாடி கட்டட விவகாரம் – சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகள் அழிப்பு!

கண்டி பூவெலிக்கட – சங்கமித்த வீதியில் இடிந்து விழுந்துள்ள ஐந்து மாடி கட்டிடங்களின் சி. சி. டிவி காணொளி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக நேற்று (13) கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையிபோது கண்டி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.வை.எஸ் பண்டார சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து மாடிக் கட்டடத்தின்நான்கு மாடிகளுக்கான ஆவணங்கள் இருந்தபோதிலும் முழு கட்டடம் தொடர்பான ஆவணங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடிமெனவும் முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கமெனவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அதேவேளை,  கட்டட உரிமையாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தடுத்துவைக்க கண்டி மேலதிக மஜிஸ்திரேட் சம்பத் கமகே நேற்று உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை மூன்று பேரை கொலைசெய்த சம்பவம் என்பதால் தண்டனைச் சட்டத்தின் 298 ஆவது பிரிவைத் தாண்டி அதிக குற்றச்சாட்டுகளுக்குச் செல்லும் போக்கு இருப்பதால், இந்த விவகாரத்தில் சுயாதீன விசாரணைக்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் பொருட்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாரென கண்டி மேலதிக மாஜிஸ்திரேட் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வதற்கு சாத்தியமா? என்பது தொடர்பான விடயங்கள் அந்த நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்றும் மேலதிக நீதவான் கூறினார்.

Related Articles

Latest Articles