மஸ்கெலியா நகரில் சமுர்த்தி வங்கியொன்று அமைக்கப்பட வேண்டுமென்கோரி , மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராஜ் அசோக்கால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (14/10/2020) நடைபெற்றது.
இதன்போது மஸ்கெலியாவில் சமுர்த்தி வங்கியொன்று இல்லாதமையால் சமுர்த்தி பயனாளிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆகவே, மஸ்கெலியாவில் சமுர்த்தி வங்கியொன்று அமைக்கப்படுவதே இதற்கு தீர்வாகுமென குறிப்பிட்டதோடு அதை அமைப்பதற்கான பிரேரணை ராஜ் அசோக் முன்வைத்தார். தவிசாளர்,உ ப தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம்,சமுர்த்தி பிரதான காரியாலயம், மாவட்டம் செயலகம், சமுர்த்தி இராஜாங்க அமைச்சர்,பிரதேச செயலகத்திற்கு கடிதம் அனுப்ப ராஜ் அசோக் கேட்டுக்கொள்ளதோடு இதற்கான நடவடிக்கையை தவிசாளர் செண்பகவள்ளி உடனடியாக செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்