புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் (Anti Terrorism Bill) படு பயங்கரமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” புதிய சட்டம் அமுலானால் ஜனநாயகம் பற்றி கதைக்க முடியாது. இப்படியான கூட்டங்களை நடத்தும் எம்மை கைது செய்யலாம். எனவே, இச்சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
