புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசு உடன் மீளப்பெற வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே தொழிற்சங்க பிரதிநிதிகள் இவ்வாறு வலியுறுத்தினர்.
” கடும் எதிர்ப்பால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இவ்வாறு ஒத்திவைக்காமல் அதனை வாபஸ் பெறுமாறு வலியுறுத்துகின்றோம்.
எதிர்வருமம் 10 ஆம் திகதி கொழும்பில் மாநாடு நடத்தப்படும். அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதன்போது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும்.” – என்றார்.
