பசறை, கோணக்கலை தோட்ட லோவர் டிவிசனை சேர்ந்த 10 பெண் தொழிலாளர்கள் உட்பட 11 பேர் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இன்று (09) முற்பகல் 11.45 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவி கூடொன்று கலைந்து தொழிலாளர்களை குளவிகள் சராசரியாக தாக்கியுள்ளன.
குளவிகொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை காப்பாற்ற சென்ற இளைஞர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இவர்கள் தற்போது பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்
