” உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை.” – என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பிரதமருக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் பங்கேற்றிருந்தார்.
இச்சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
” தேர்தல் ஆணைக்குழுவுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், தற்போதைய சூழ்நிலையில் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுக்கும்.” -என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய கூட்மொன்று நாளை நடைபெறவுள்ளது.










