ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ரூ. ஒரு கோடி

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ஒரு கோடியை தாண்டியதாக ஹட்டன் டிப்போவின் சிரேஷ்ட பரிசோதகர் தெரிவித்தார்.

புத்தாண்டு முன்னிட்டு சித்திரை வீடு திரும்பியர்வர்கள் மீண்டும் வீடு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சித்திரை புத்தாண்டுக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்த 12,13,14 ஆகிய திகதிகளில் ஹட்டனை நோக்கி வருகை தந்தனர். இதனால் இந்த தினங்களில் ஹட்டன் டிப்போவின் வருமானம் ஒரு கோடியை தாண்டியுள்ளது.

அதே போன்று இன்றைய தினமும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் தொழிலுக்காக கொழும்பு நோக்கி செல்வதற்கு ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினை நோக்கி வருகை தந்துள்ளனர். அவர்கள் சிரமமின்றி செல்வதற்கு நாங்கள் சாரதிகளையும் நடத்துனர்களையும் தொலைபேசி அழைப்பின் ஊடாக அழைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

எனினும் எமது டிப்போவில் ஊழியர்களின் குறைபாடு காரணமாக உடனுக்குடன் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்பட முடியாத நிலையில் இருக்கிறோம். காரணம் எமது டிப்போவில் பணிபுரியும் பெரும் பாலான ஊழியர்கள் சாரதிகள், நடத்துனர்கள், அனைவரும் தூர பிரதேசங்களிலிருந்து தான் வர வேண்டும். அவர்கள் மாதத்திற்கு ஒரு தடைவையே வீடு செல்கின்றனர். இப்போது சித்திரை புத்தாண்டுக்கு சென்றுள்ளதால் அவர்கள் வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இருக்காது. ஆகவே தான் எங்களுக்கு அடிக்கடி பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles