உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரலொன்று உள்ளது. உண்மையைக் கண்டறியும் விடயத்தில் பல்வேறு தலையீடுகள் இருப்பது தெரிகின்றது. எனவே, எமது ஆட்சியின்கீழ் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறுக்கீடுகள் அற்ற சுதந்திரமான – பாரபட்சமற்ற விசாரணை அவசியம். எமது ஆட்சியின்கீழ் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படும். தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள்.
சுயாதீன உள்ளக விசாரணைக்கு புறம்பாக, சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.










