Update : யாழ். நெடுந்தீவு பகுதியில் படுகொலை : வெளியான தகவல்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் , 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரி, 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 50 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிய்விக்கப்பட்டுள்ளது.

கைதானவர் கனடிய குடியுரிமையுடையவர் எனவும் ஹெரோயின் பாவனையாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை அவர் தொடர் ஹெரோயின் பாவனையால் இயல்பு நிலையில் இல்லாதவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகால பகையை தீர்க்க இந்த கொலையை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கொலையின் பின்னர் 40 பவுண் தங்கநகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளதோடு அந் நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அவரது உறவினர்கள்.

அத்தோடு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் தூக்கத்திலிருந்த போது கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.வீட்டு நாய் குரைத்து சத்தமிட நாயையும் வெட்டியுள்ளார். நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும், அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். கத்தியை நெடுந்தீவிலுள்ள கிணறொன்றில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles