” நெருக்கடியில் கைகொடுத்த இந்தியாவை ஒருபோதும் மறக்ககூடாது” – பிரதமர்

” இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தபோது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது. இன்றைய இந்த நிகழ்வானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும் முத்திரை வெளியீட்டு நிகழ்வும் இன்று 23.04.2023 நடைபெற்றது.

இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபையின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன், நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்தனவும் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன , இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, உதவி தூதுவர் டாக்டர் திருமதி எஸ்.அதிரா ஆகியோரும்

நுவரெலியா டெல்லி ரோட்டறி கழக உறுப்பினர்களும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.தியான மண்டபத்திற்கான அனுசரனையை டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடுப்பத்தினர் வழங்குகின்றனர்.

தொடர்ந்து அங்கு பேசிய பிரதமர்,

இன்று சீதையம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தியான மண்டபத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதற்கு காரணம் அதற்கான நிதியை வழங்குகின்றவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இது ஒரு புறம் எங்களுடைய நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற கலை கலாச்சார ரீதியான ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. எங்களுடைய இரு நாட்டிற்கான உறவு பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.
இந்தியாவின் இமயமலையின் பல பகுதிகளிலும் தியான மண்டபங்களும் அதற்கான சூழலும் அமைந்திருக்கின்றது.அதே போல இன்று இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகால மலையின் அடிவாரத்தில் சீதையம்மன் ஆலயத்தில் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் மிகவும் அழகாக இராமயணத்திற்கும் இலங்கைக்குமான தொடர்பை விரிவாக எடுத்துக் கூறினார்.இந்த இதிகாசமானது பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.
இலங்கை நாடானது இன்று முன்னோக்கி செல்கிறது என்றால் அதற்கு இந்தியா எங்களுக்கு செய்த உதவிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.எங்களுடைய நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவின் பொழுது இந்தியாவின் உதவியானது நாம் மீண்டும் எழுந்து முன்னோக்கி நடப்பதற்கான அடித்தளத்தை வகுத்துள்ளது.
மதங்களுக்கு இடையிலான நெருங்கிய புரிந்துனர்வும் எமது பொருளாதார பின்னடைவின் பொழுது எமக்கு பல உதவிகளை பெற்றுக் கொள்ள வழிவகுத்தது.
புத்தரின் போதனைகள் எம்மை நல்வழிப்படுத்துவதற்கு ஒரு தலமாக அமைந்திருக்கின்றது.அதனை நாம் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.இன்று நாம் அனைத்து மதங்களுக்கும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றோம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles