வரலாற்று பிரசித்தி பெற்றதும், தொல்பொருள் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான சொரகுன ரஜமகாவிகாரை வளவில், புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியிலேயே, மேற்படி வரலாற்று பிரசித்திபெற்ற சொரகுன ரஜ மகாவிகாரை அமைந்துள்ளது.
பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக கடமையாற்றிவந்த இந்நபர், ஏனைய இரு இளைஞர்களையும் கூட்டிச் சென்று, குறிப்பிட்ட இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தனர்.
இது குறித்து, சொரகுன ரஜமகாவிகாரைப் பொறுப்பாளரான சங்கைக்குரிய பன்சானந்த தேரர், பண்டாரவளைப் பொலிஸாருக்குசெய்த முறைப்பாட்டிற்கமைய ,விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து புதையல் தோண்டிய மூவரையும் கைதுசெய்தனர்.
இம் மூவரும் விசாரணையின் பின்னர்,பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதேச பொலிஸ் அதிபர் அத்துல த சில்வா தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை