” தேர்தலை பிற்போட எத்தனிப்பது ஜனநாயக விரோதச்செயல்” – விமல்

தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

‘பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை’ என்று நுவரெலியா கிராண்ட் ஹொட்டலில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் விமல் வீரவன்ஸவிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான மொட்டு அரசும் அஞ்சி ஓடுகின்றமை ஜனாதிபதியின் உரையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது. மக்களின் ஆணையை இழந்த அரசால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.

நிலையான அரசு ஒன்று இருந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சமாந்தரநிலைக்கு வரும். எனவே தேர்தல் ஒன்று மிகவும் அவசியம். தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles