பசறை, மொனரும்கல விகாரையின் தேரர் ஒருவரை, பசறை நகரில் வைத்து பெண் ஒருவர் தாக்கியுள்ளார் என குறித்த தேரரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் விகாரையில் இருந்து தனிப்பட்ட தேவைக்காக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைப்பிலிட சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பசறை டெமேரியா கம்மான பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை தாக்கியதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கான காரணம் பூஜை பொருட்களினால் ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கியதாக கூறப்படும் பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த தேரர் நேற்று இரவு 9 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் விடுப்பு பெற்றுக் கொண்டு வெளியேறி அதன்பின் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தான் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா